2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

நெல்லை விற்க முடியாமல் தீட்டார் விவசாயி

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 24 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தான் விளைவித்த நெல்லை விற்க முடியாத விரக்தியில், அதை வயலோடு சேர்த்து தீ வைத்து எரித்தார். இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வீடியோ பதிவை பாரதிய ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு மத்திய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்து உள்ளார்.

அதில் அவர், ‘உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி, தனது நெற்பயிரை விற்பதற்காக கடந்த 15 நாட்களாக ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களாக ஏறி இறங்கினார். ஆனால் விற்க முடியாததால் விரக்தியடைந்த அவர் சொந்த நெற்பயிரை தீ வைத்து கொளுத்தி இருக்கிறார். இந்த அமைப்பு, விவசாயிகளை எங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது? வேளாண் கொள்கையை மறுபரிசீலனை செய்வதே இந்த தருணத்தின் தேவை ஆகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு விவசாயி தன் சொந்த பயிர்களுக்கு தீ வைப்பதை விட பெரிய தண்டனை எதுவும் இல்லை எனக்கூறியுள்ள வருண் காந்தி, நமக்கு உணவளிப்பவர்களை நம்மால் பாதுகாக்க முடியாவிட்டால் அது நாட்டில் உள்ள அனைவரின் தோல்வியாகும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .