2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

நேருவின் நினைவிடத்தில் சோனியா மரியாதை

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 14 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி:

 நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 132ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியிலுள்ள நேருவின் நினைவிடத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி, நேருவின் பிறந்தநாளையொட்டி சமூக வலைத்தளம் வாயிலாக மரியாதை செலுத்தி உள்ளார். இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .