Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம், புதன்கிழமை (23) மாலை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில், புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தானின் உயர்மட்ட தூதர் சாத் அகமது வாராய்ஸ்க்கு வெளியுறவுத் துறை அமைச்சு, புதன்கிழமை (23) இரவு சம்மன் அனுப்பியுள்ளது.
அதன் பேரில் ஆஜரான தூதரிடம், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி அந்த நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த அதிகாரிகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேப்போல, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு படை ஆலோசனை அதிகாரிகளும் திரும்ப அழைக்கப்படுகின்றனர்.
பரஸ்பர உயர் தூதரகங்களில் உள்ள இந்த ஆலோசகர் பதவிகள் இரத்து செய்யப்படுகின்றன. இவர்களுக்கான உதவியாளர் பணியிடங்களும் திரும்ப பெறப்படுகிறது.
அத்துடன், இரு நாட்டில் உள்ள பரஸ்பர உயர் தூதரகங்களிலும் அதிகாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் எண்ணிக்கை தற்போது உள்ள 55இல் இருந்து 30ஆக குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 1ஆம் திகதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago