2025 மே 10, சனிக்கிழமை

பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டம்?

Freelancer   / 2025 ஏப்ரல் 24 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு, புதன்கிழமை (23) உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் வியாழக்கிழமை (24) காலை, ஊழியர் ஒருவர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் கேக் கொண்டு சென்றார். 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கொண்டாட இந்த கேக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கேட்ட கேள்விக்கு பாகிஸ்தான் தூதரக ஊழியர் மௌனம் சாதித்தார்.

சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் வேதனை நிலவி வரும் நிலையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் கேக்குடன் கொண்டாடுவதாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் தூதரக அலுவலகத்துக்கு அளிக்கப்பட்டு இருந்த பாதுகாப்பை பொலிஸார் வாபஸ் பெற்றனர். தூதரகம் அருகே இருந்த தடுப்புகளை பொலிஸார் அகற்றினார்கள்.

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலை கண்டித்து பாகிஸ்தான் தூதரகம் அருகே, வியாழக்கிழமை (24) பா.ஜ.க.வினர் மிகப்பெரிய அளவிலான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X