Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 10:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில், ஒருவேளை உணவைக்கூட நிம்மதியாக உண்ணமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பசியால் பரிதவித்த ஆட்டுக்குட்டிக்கு நாயொன்று பாலூட்டி பசியாற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள வானரமுட்டி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பெருமாள்சாமி. கட்டட வேலைகளை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வரும் இவர், தனது வீட்டில் கிட்டியம்மாள் என்ற பெண் நாய் ஒன்றை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கருவுற்று இருந்த கிட்டியம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 குட்டிகளை ஈன்றுள்ளது. பெருமாள்சாமி அந்த 6 குட்டிகளையும் தனது நண்பர்களுக்கு கொடுத்துவிட்டார்.
இதற்கிடையே தென்காசி அருகேயுள்ள மேலப்பாவூரில் உள்ள பெருமாள்சாமியின் மூத்த மகள் இலக்கியா வீட்டில் வளர்த்த ஆடு ஒன்று 4 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில், ஒரு குட்டியை தனது தந்தை பெருமாள் சாமியிடம் கொடுத்துள்ளார். பெருமாள்சாமி தனது வீட்டில் அந்த ஆட்டுக்குட்டியை வளர்த்து வருகிறார்.
ஆட்டுக்குட்டியும் நாயும் பெருமாள்சாமி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், ஆட்டுக்குட்டிக்கு பசி எடுத்ததும் நாய் பால் கொடுத்ததைப் பார்த்த பெருமாள்சாமி குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டனர். தாயில்லாத ஆட்டுக்குட்டியை தனது பிள்ளையாக நினைத்து பால் கொடுத்து வரும் நாயை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago