2025 மே 10, சனிக்கிழமை

பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டி

Mayu   / 2023 டிசெம்பர் 08 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையை சேர்ந்தவர் விவசாயி அசோக் குமார். தனது வயலில் விவசாயம் செய்து வருவதோடு, ஆடு, மாடுகளையும் குடும்பத்தினர் பாசத்தோடு வளர்த்து வருகின்றனர்.

இலாப நோக்கத்திற்காக மட்டுமின்றி அவற்றின் மேல் உள்ள பாசம் காரணமாகவும், தலைமுறை தலைமுறையாக அசோக் குமாரின் குடும்பத்தார் ஆடு மாடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருக்கும் ஒரு பசு, மூன்று மாதங்களுக்கு முன்பு கன்றை ஈன்றுள்ளது.

இளங்கன்றும் பால்குடித்து வரும் நிலையில், அதே வீட்டில் இருக்கும் ஆடும் குட்டிகளை ஈன்றுள்ளது. இந்நிலையில், தனது தாய் இருக்க,  பசித்தவுடன் நேராக பசுமாட்டிடம் சென்ற ஆட்டுக்குட்டி பால் குடிக்கத்தொடங்கியுள்ளது.

இன்று மட்டுமல்லாமல் பல நாட்களாகவே இந்த ஆட்டுக்குட்டி பசுமாட்டிடம் பால் குடித்து வருவதாக சொல்லப்படுகிறது. சில இடங்களில் தாய் இன்றி தவிக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கு நாய்கள் தாயுள்ளத்தோடு பால்கொடுப்பதை பார்த்திருப்போம். இந்த நிலையில், தனது தாய் இருந்தும், உரிமையோடு பசுவிடம் ஆட்டுக்குட்டி பால் குடிப்பதும், அதனை பசுமாடும் அனுமதிப்பதுமான செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X