A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 10 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுரை
விவசாயி எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் முதல்வர், புதிய வேளாண் சட்டங்களை ஆதரிப்பதன் மூலம் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டே விவசாயிகளுக்குப் பச்சை துரோகம் செய்கிறார் என திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
மதுரையில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று தேர்தல் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டார். அதில் செல்லூர், கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் புதூரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:
''மதுரையை சிட்னியாக மாற்றுவேன் என்றார் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ. ஆனால், 10 ஆண்டுகளாக மதுரையில் சாலைகளே போடப்படவில்லை என்பது தெரிகிறது. மதுரையில் செயல்படுத்தப்படும் நல்ல திட்டங்களைக் கனிமொழி பார்க்க வேண்டும் என செல்லூர் ராஜூ அழைத்தார்.
இதை நம்பி வந்து பார்த்த போதுதான் எந்தத் திட்டமும் செயல்படவில்லை எனத் தெரிந்தது. எதையும் செயல்படுத்தாத ஆட்சிதான் இங்கு நடக்கிறது. ரூ.1,500 கோடியில் பல மேம்பாலங்கள், கூட்டுக் குடிநீர் திட்டம் மதுரை அரசு மருத்துவமனை மேம்பாடு எனப் பல திட்டங்களை நிறைவேற்றியது திமுக.மதுரையில் தமிழ்த் தாய்க்குச் சிலை அமைப்பதாகக் கூறினர்.
இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை. ஆனால், திருவள்ளுவருக்குக் கன்னியாகுமரியில் சொன்னபடி சிலை அமைத்தவர் கருணாநிதி. இதுதான் திமுகவுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் உள்ள வித்தியாசம். நாங்கள் சொல்வதைச் செய்வோம். அவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். எதையும் செய்ய மாட்டார்கள்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago