2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பஞ்சாயத்து தலைவியாக பதவியேற்ற மூதாட்டி!

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 20 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நெல்லை;

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள்   நடந்தது. இதேபோல், ஏனைய 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத மற்றும் காலியிட பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தல்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் இன்று புதன்கிழமை  காலை 10 மணிக்கு பதவி பிராமணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

இந்தநிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டி பஞ்சாயத்து தலைவராக  தமிழகத்தின் மூத்த பஞ்சாயத்து தலைவியாக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவியேற்றார்.  

தனது வெற்றி குறித்து மூதாட்டி பெருமாத்தாள் கூறுகையில்; எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. நாங்கள் எப்போதுமே ஊர் மக்களுக்கு நல்லது செய்கிறோம். அதனால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. நான் தற்போது தான் முதல் முறையாக நின்று வெற்றிபெற்றுள்ளேன். ஊர் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .