A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறமையான தலைமையின் கீழ் தமிழக அரசு செயல்படுவதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், நேற்று கலைவாணர் அரங்கில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது
"ஜெயலலிதா மறைந்த பின்னர், இந்த அரசு அதன் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது என பலராலும் ஊகிக்கப்பட்டது. அவ்வாறு விமர்சனம் செய்த அனைவரின் கணிப்புகளும் தவறு என தீர்க்கமாக நிரூபிக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் திறமையான தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அரசு, அதன் ஆட்சிக் காலத்தை முழுமையாக நிறைவு செய்தது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டை நாட்டிலேயே தலைசிறந்த மாநிலமாக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது.
தமிழக அரசு, இந்திய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இந்திய அரசால் 2019ஆம் ஆண்டு முதன்முறையாக கணக்கிடப்பட்ட நல் ஆளுமைத்திறன் குறியீட்டுப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளோம். கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 'இந்தியா டுடே' பத்திரிகை நடத்திய 'மாநிலங்களின் நிலை' என்ற தலைப்பில் மேற்கொண்ட ஆய்வில், 'ஒட்டு மொத்த செயல்திறன் மிக்க மாநிலம்' என்று தமிழ்நாடு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026