2025 மே 09, வெள்ளிக்கிழமை

பெண்ணை நிர்வாணமாக்கி சிறுநீர் குடிக்க வைத்த கொடூரர்கள்

Editorial   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் ரூ.9,000 கடனுக்கு ரூ 1,500 வட்டி கட்டத் தவறியதால் பட்டியலினப்பெண்ணை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் தற்போது தலைமறைவாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவர் தாக்கப்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு சிகிசைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. ரூ.1,500 வட்டி கட்ட தவறியதால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கடந்த 23-ம் தேதி இரவு காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

இரவு 10 மணியளவில் பம்பிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். சுமார் ஆறு பேர் என்னைப் பிடித்து நிர்வாணமாக்கி பின்னர் கொடூரமாகத் தாக்கினர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுநீரை எடுத்து என் வாயில் ஊற்றினார். தலையில் காயம் அடைந்த என்னை கட்டையால் தாக்கத் தொடங்கினர். நான் எப்படியோ அந்த இடத்தில் இருந்து தப்பித்து காவல் நிலையத்தை அடைந்தேன் என்று அந்த பெண் தனது புகாரில் கூறியதாக அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X