Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நபரொருவர் பணத்திற்காக சொந்தத் தங்கையைத் திருமணம் செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டில் அரசின் திட்டத்தின் கீழ் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளுக்கு 35,000 ரூபா உதவித்தொகையாக வழங்கப்படுகின்றது.
மேலும் இத்தொகையில் 20,000 ரூபா நேரடியாக மணப்பெண்ணின் வங்கிக் கணக்கிலும், மீதமுள்ள தொகை இருவருக்கும் பரிசுப் பொருட்களாகவும் வழங்கப்படுகின்றது.
இந்நிலையில், கடந்த 11 ஆம் திகதி பெரோசாபாத் மாவட்டம் டுயுன்லா பகுதியில் குறித்த திருமண திட்டத்தின் கீழ் 51 தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள் மற்றும் அவர்கள் அளித்த ஆவணங்களை அந்தந்த கிராம மக்களின் உதவியுடன் சரிபார்க்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதன்போது ஒரு தம்பதியின் புகைப்படத்தை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு நபர் தனது சொந்த சகோதரியையே திருமணம் செய்துகொண்டுள்ளார் என்பதை கிராம மக்கள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, திருமணம் செய்துகொண்ட இருவரும் சகோதர - சகோதரிகள் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
அத்துடன் அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை பெற சொந்த சகோதரியை திருமணம் செய்த அந்த நபர் மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அப் புகாரை தொடர்ந்து குறித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதோடு, திருமணத்தின் போது அவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப்பொருட்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
6 hours ago