2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு?’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 12 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

போபால்  

மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தின் காடேகான் நகரில் துணை கலெக்டர் தனது  குடும்பத்துடன் வெளியூர் சென்று இரு வாரங்களுக்குப் பின் வீடு திரும்பினார். அப்போது, வீட்டிலுள்ள பொருட்கள் கலைந்து கிடந்தன. உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் கொடுத்தார்.

பொலிஸாரின் சோதனையில் ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'பணம் இல்லாத வீட்டுக்கு பூட்டு எதற்கு கலெக்டரே?' என, எழுதப்பட்டு இருந்தது.

திருடவந்த திருடர்களுக்கு  வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் கடிதம் எழுதிய திருடனின் செயல் அனைவரையும் பெரும் சுவாரசியத்தி வயிறுகுழுங்க சிரிக்கவைத்தது. இந்த கடிதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .