A.K.M. Ramzy / 2021 ஜனவரி 10 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகாராஷ்டிர;
பிறந்து ஒரு மாதம் முதல் 3 மாதங்கள் வரையிலான சிசுக்கள் பராமரிக்கப்பட்ட பிரிவில் ஏற்பட்ட தீயினால், அச் சிசுகளில் 10 சிசுக்கள் உடல்கருகியும், மூச்சுத்திணறல் ஏற்பட்டும் மரணமடைந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், அந்தப்பிரிவிலிருந்து ஏழு சிசுக்கள் காப்பற்றப்பட்டுள்ளன. பண்டார மாவட்ட பொதுமருத்துவமனையில் சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
புதிதாக பிறந்த சிசுக்களை பராமரிக்கும் பிரிவில் பணியிலிருந்த செவிலியர் ஒருவர் புகை வருவதை கவனித்துள்ளார்.
அதுதொடர்பில் அறிவித்துள்ளார். அதனையடுது்து விரைந்து செயற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் அந்தப் பிரிவுக்குச் சென்று சிசுக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத் பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர்.
விரைந்து செயற்பட்ட தீயணைப்பு படையினர், அப்பிரிவிலிருந்து ஏழு சிசுக்களை மீட்டெடுத்தனர். எனினும், 10 சிசுக்கள் உயிரிழந்துவிட்டனர். தீ மற்றும் மூச்சுத்திணறால் அச்சிசுகள் மரணித்துவிட்டன என, மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.
18 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
8 hours ago
9 hours ago