2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

‘பனாமா பேப்பர்ஸ்’ அமிதாப் பச்சனிடம் விசாரணை?

Editorial   / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மும்பை, 
 
வெளிநாடுகளில் பணம் பதுக்கிய ‘பனாமா பேப்பர்ஸ்’ வழக்கில் நடிகர் அமிதாப் பச்சனை விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது. 
 
பணம் பதுக்கல்
 
பனாமா நாட்டை சேர்ந்த மொசாக் பொன்சேகா என்ற சட்ட நிறுவனம், வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணம் பதுக்கியவர்கள், சொத்துகளை வாங்கியவர்கள் ஆகியோரை பற்றிய ஆவணங்களை வைத்திருந்தது. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு, சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்கள் அந்த ஆவணங்கள் குறித்து புலனாய்வு நடத்தி தகவல்களை வெளியிட்டது, ‘பனாமா பேப்பர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றன. 
 
இதில், வெளிநாடுகளில் பணம்போட்டு வைத்துள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு தரப்பினரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. 
 
ஐஸ்வர்யா ராயிடம் அதிரடி விசாரணை 
 
இந்த விசாரணை தொடர்பாக, இந்தி நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு அமலாக்கத்துறை ‘சம்மன்’ அனுப்பி இருந்தது. அதன்படி ஏற்கனவே அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனிடம் கடந்த சில வாரங்களுக்கு முன் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 
 
இந்தநிலையில் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அபிஷேக் பச்சனின் மனைவியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் 6 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.விசாரணைக்கு பிறகு நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை திரும்பி உள்ளார். 
 
அமிதாப் பச்சனிடம்...
 
இந்த நிலையில் அமிதாப் பச்சனிடமும் விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேவைப்பட்டால் அவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X