2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பப்பிக்கு வளைகாப்பு

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் சித்ரா; அவரது தாய் லட்சுமி ஆகியோர் தாங்கள் வளர்க்கும் செல்ல நாயான ‘பப்பி’க்கு நேற்று முன்தினம் (01) வளைகாப்பு நடத்தினர். அவரது உறவினர்கள், நண்பர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.


இதுபற்றி சித்ரா கூறுகையில், "எங்கள் வீட்டில் குழந்தையை போல் பப்பி வளர்வாள். ஐந்து ஆண்டுகளாக செல்லமாக வளர்கிறாள். பப்பிக்காக வீட்டில் தனிப் படுக்கை; தேவையான சாதனங்கள் வைத்துள்ளோம். எங்கள் வீட்டு குழந்தையாக பாவிப்பதால், பப்பி கருவுற்றதும் வளைகாப்பு நடத்த திட்டமிட்டோம்.

அதன்படி 11 தட்டு வைத்து, வளைகாப்பு நடத்தியிருக்கிறோம். கருவுற்ற ஒரு பெண்ணுக்கு எந்த உணவு தருவோமா அதேபோல் செய்தோம். பப்பிக்கு அடுத்தவாரம் பிரசவம் நடக்க போகிறது. ஸ்கேன் செய்தபோதுஅவளுக்கு 7 குட்டிகள் பிறக்க உள்ளது தெரிந்தது.

அந்த 7 குட்டிகளையும் நாங்களே வளர்க்க திட்டமிட்டிருக்கிறோம்”என்கிறார் பாசத்துடன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .