A.K.M. Ramzy / 2021 மே 30 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேலூர்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி மற்றும் முருகன் ஆகிய இருவரும் 30 நாள் பரோல் கோரியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ளார்.
இதே வழக்கில் கைதாகியுள்ள நளினியின் கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் உள்ளார். இவர்கள் இருவரும் தம்பதி என்பதால் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்பதால் 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.
அதேபோல், நளினியும் மாமனாரின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் 30 நாள் பரோல் வழங்கக் கோரியுள்ளார்.
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago