2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு, பெண்களால் நேர்ந்த கதி

Editorial   / 2022 ஜனவரி 28 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் ஒருவரை சிலர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரின் தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தி, ஆடைகளை கிழித்து வீதியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று அவமானப்படுத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தப் பெண் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது, பெண்கள் பலர் ஒன்றாக கூடி கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

புதுடெல்லியின் ஷாதரா பகுதியில் குடியரசு தினமான நேற்று முன்தினம் (27) பட்டப்பகலில், பலர் முன்னிலையில், பெண் ஒருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, அடித்து உதைத்து பெண்களாலேயே  ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரின் உடைகளை கிழித்து, தலைமுடியை வெட்டி, முகத்தில் கருப்பு மை பூசி ஊர்வலம் அழைத்துச் சென்றபோது அங்கு கூடியிருந்த பெண்கள் உள்ளிட்டோர் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அந்த பெண் ஏற்கனவே சிலரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ஊர்வலம் அழைத்து வரப்பட்ட தகவல் மேலும் அதிர்ச்சி தருவதாக இருந்தது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான அப்பெண்னை இந்த அளவுக்கு அவமதித்தது மனிதநேயமற்ற நிகழ்வாக இருந்தது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .