2026 மார்ச் 07, சனிக்கிழமை

பழனிசாமி ஆட்சி வராது; அடித்து சொல்லும் வைகோ

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 17 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேலம் :

''பணத்தை கொட்டி கொடுத்தாலும், இ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது,'' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசினார்.

சேலம், ஐந்து ரோட்டில், மண்டல, ம.தி.மு.க., சார்பில் தேர்தல் நிதி வழங்கும் விழா, நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகிகள், 25.60 இலட்சம் ரூபாய் வழங்கினர். அதை பெற்று, வைகோ பேசியதாவது:எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற, முதல்வர் பிடிவாதமாக உள்ளார். அதன் பின்னால், இலட்சக்கணக்கான விவசாயிகளின் கண்ணீரை பற்றி, அவர் கவலைப்படவில் லை. மத்திய அரசுக்கு எடுபிடியாக, அ.தி.மு.க., அரசு உள்ளது.

பிரதமர், திருக்குறளை உச்சரித்தாலும், அவ்வையார் பாடலை பாடினாலும், தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. பெற்றோல், டீசல் விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை அதிகரிப்பால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திராவிட இயக்க கருவறை, ம.தி.மு.க., தான். தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். பணத்தை கொட்டி கொடுத்தாலும், இ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது. தேர்தலுக்கு பின், பொதுக்குழு நடத்தி, நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .