Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2025 மார்ச் 02 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடெல்லியில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு இனி எரிபொருள் கிடையாது என, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கூறியுள்ளார்.
புதுடெல்லியில், காற்று மாசுபாட்டால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரம், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் எதிரொலித்தது. ஆம் ஆத்மியும், பா.ஜ.க.வும் பிரசாரத்தின்போது இதுபற்றி காரசார விவாதத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், “புதுடெல்லியில் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு பெட்ரோல் பம்புகளில் இனி எரிபொருள் வழங்கப்படமாட்டாது” என, டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர மன்ஜீந்தர் சிங் சிர்சா, ஞாயிற்றுக்கிழமை (2) கூறியுள்ளார்.
“புதுடெல்லியில், மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் மார்ச் 31ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
“இந்த முடிவு பற்றி மத்திய பெற்றோலிய துறை அமைச்சுக்கும் தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.
அத்துடன், “15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை அடையாளம் காணும் வகையில், பெட்ரோல் பம்புகளில் நாங்கள் கருவிகளை இணைத்து வருகிறோம். அவற்றின் உதவியுடன் பழமையான வாகனங்கள் இனங்காணப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு எரிபொருள் தரப்படாது” என்றும் அவர் கூறியுள்ளார்.
“டெல்லியில், எரிபொருள் விநியோக கட்டுப்பாடுகளுடன், உயர்ந்த கட்டிடங்கள், ஓட்டல்கள், டெல்லி விமான நிலையங்கள் மற்றும் வர்த்தக வளாகங்கள் அனைத்தும் புகை மூட்டம் ஏற்படாத வகையில் அதனை கட்டுப்படுத்தும் துப்பாக்கிகளை நிறுவ வேண்டும்.
“நடப்பு ஆண்டு டிசெம்பருக்குள் பொது போக்குவரத்திற்கு பயன்படக்கூடிய, 90 சதவீத சி.என்.ஜி. பஸ்களை நீக்கி விட்டு அவற்றுக்கு மாற்றாக, மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
44 minute ago
45 minute ago