2025 மே 10, சனிக்கிழமை

பழைய 2 ரூபாய் நோட்டுக்கு பிரியாணி

Mithuna   / 2023 டிசெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத் பிரியாணி பெயரைக் கேட்டாலே ருசிக்க தோன்றும். சுவையான இந்த பிரியாணியை பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந் நிலையில் ஐதராபாத்தில் பிரபல​ ஹோட்டல் நிர்வாகம் ஒன்று 2 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டது.

இதனைக் கண்ட அசைவ பிரியர்கள் ஹோட்டல் முன்பு குவிந்தனர். அப்போதுதான் ஹோட்டல் நிர்வாகம் ஒரு நிபந்தனையை விதித்தது. அது என்னவென்றால் பழைய 2 ரூபாய் நோட்டுகள் தந்தால் மட்டுமே 2 ரூபாய்க்கான பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்தது.

இதனை கேட்ட வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஒரு சிலர் தங்கள் வீடுகளில் வைத்திருந்த பழைய 2 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு குடும்பத்துடன் ஹோட்ட்லுக்கு சென்று ஐதராபாத் பிரியாணி சாப்பிட்டனர்.

இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறுகையில்:-

“பொதுமக்களிடம் இன்னும் பழைய 2 ரூபாய் நோட்டுகள் இருக்கிறதா என்பதை கண்டறிய இந்த நூதன விற்பனையை தொடங்கினோம். இதுவரை எங்களிடம் 120 ரூபாய் மதிப்பிலான 2 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

எங்கள் உணவகம் சார்பில் 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகள் கொண்ட பாகுபலி சாப்பாடு சாப்பிட்டால் ரூ.1 இலட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளோம்.

இதன் விலை ரூ.1,999 இந்த கட்டணத்தை செலுத்தி 30 நிமிடங்களில் 30-க்கும் மேற்பட்ட உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ரூ.1 இலட்சம் ரொக்க பரிசை வழங்கி வருகிறோம். இதுவரை இந்த போட்டியில் 7 பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்”. இவ்வாறு அவர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X