2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பழைய தகராறு கொலையில் முடிவு

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 27 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை

சென்னை சேத்துப்பட்டு அரங்க நாதன் தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் ஒரு சாரதி. இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 107ஆவது வட்ட துணைச் செயலாளராக பதவி வகித்தார். டாக்டர் அம்பேத்கர் சமூக நலச் சங்கம் என்ற அமைப்பையும் நடத்தி வந்த இவர், சேத்துப்பட்டு மேயர் சிட்டிபாபு தெருவில் வேலைக்கு ஆட்களை வைத்து, தேநீர்க்கடையும் நடத்தி வந்தார்.

இந்நிலையில், தேநீர்க்கடையின் அருகே இளங்கோவன்  இரவு, நண்பருடன் (48) பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், இளங்கோவனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி  ஓடிவிட்டனர்.

இச்சம்பவத்தை அறிந்த  சேத்துப்பட்டு பொலிஸார் இளங்கோவனை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளங்கோவன் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிஸார் கூறும்போது, "மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபு சேத்துப்பட்டு பகுதியில் குடியிருந்தபோது, அவருக்கும், இளங்கோவனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இளங்கோவன் நடத்தி வந்த தேநீர்க்கடைக்கு கடந்த 20ஆம் திகதி நண்பர்களுடன் வந்த சஞ்சய் பிரபு, கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், கடையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.இந்த சூழலில்தான் இளங்கோவன் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .