2025 ஜூலை 31, வியாழக்கிழமை

பஸ் ஸ்டியரிங்குடன் வலம் வரும் நடத்துனர்

Editorial   / 2022 மார்ச் 25 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி நகரத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 26). இவர் ஒரு தனியார் பஸ்ஸில் நடத்துனராக வேலை செய்தார். அந்த பஸ்ஸின் டிரைவராக வேண்டும் என்று ஆசையிருந்தது. இதற்காக அவர் ஓட்டுநர் பயிற்சி வகுப்புக்கும் சென்றுளார். ஆனால் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினார். இதில் அவரது வாழ்க்கையே தடம்புரண்டுவிட்டது. 

விபத்தில் சிக்கி தலையில் பலத்த அடிபட்டதால் மஞ்சுநாத் மனநலம் பாதிக்கப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்ட போதிலும் டிரைவராக வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவரது ஆழ்மனதில் பதிந்து போனது.

இதனால் தினமும் காலை காக்கி சட்டை அணிந்து கொண்டு சிந்தாமணி பஸ் நிலையம் வரும் மஞ்சுநாத் தனது கையில் ஒரு ஸ்டியரிங், ஒரு கண்ணாடி எடுத்து கொண்டு நடைபயணமாக புறப்படுகிறார். அவர் தான் பஸ் ஓட்டுவதாக நினைத்து கொண்டு ஒவ்வொரு பஸ் நிறுத்தமாக நின்று பயணிகளை கூப்பிடுவது போல ஏறுங்கள்... இறக்குவதைப் போன்று இறங்குகள் என கூறுகிறார். பின்னர் கையை வைத்தே கியர் போட்டு கொண்டு அவர் தொடர்ந்து பஸ் ஓட்டுவது போல் தான் கையில் வைத்துள்ள ஸ்டியரிங்கை அங்குமிங்கும் திருப்பியபடி நடந்தே செல்கிறார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .