A.K.M. Ramzy / 2020 நவம்பர் 23 , பி.ப. 02:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
மும்பை,
மும்பையில் இருந்து சோலாப்பூருக்கு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் இருந்தனர். பஸ் சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் நவிமும்பை, சான்பாடா பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பஸ்ஸின் முன் பகுதியில் இருந்து புகை வருவதை டிரைவர் கவனித்தார்.
உடனடியாக அவர் பஸ்ஸை சாலையோரம் நிறுத்தினார். மேலும் பயணிகளிடம் பஸ்ஸில் தீப்பிடித்தது பற்றி கூறினார். இதையடுத்து பயணிகள் பதற்றத்துடன் வேகமாக பஸ்ஸில் இருந்து இறங்கினர்.
பயணிகள் இறங்கிய சிறிதுநேரத்தில் பஸ் தீப்பிடித்து எரியத்தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த வாஷி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பஸ்ஸில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். பஸ்சில் இருந்து பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
முன்னதாக பஸ்ஸில் இருந்து வேகமாக இறங்கிய போது சில பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் பஸ்சில் வைத்திருந்த பயணிகளின் உடைமைகள் எரிந்து நாசமாகியது.
22 minute ago
27 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
27 minute ago
32 minute ago