A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி :
குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தின்போது, துப்பாக்கியால் சுட்டவர், நேற்று, பா.ஜ.,வில் சேர்ந்த சில மணி நேரத்தில், அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
டில்லி, ஷாஹீன் பாக் பகுதியில், இந்தாண்டு பெப்ரவரி முதலாம் திகதி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது, கபில் குஜ்ஜார் என்பவர், திடீரென துப்பாக்கியால் வானத்தை நோக்கி, இரு முறை சுட்டு, பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று, உத்தரபிரதேசம், காஜியாபாத் மஹாநகர் பா.ஜ., தலைவர் சஞ்சீவ் சர்மா முன்னிலையில், கபில் குஜ்ஜார், பா.ஜ.,வில் இணைந்தார். இது குறித்து, சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதனால் நெருக்கடிக்கு ஆளான, பா.ஜ., மேலிடம், கபில் குஜ்ஜாரை, கட்சியில் இருந்து நீக்க உத்தரவிட்டது. இதையடுத்து, அவர் கட்சியில் சேர்ந்த சில மணிநேரத்தில் நீக்கப்பட்டார்.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026