2026 பெப்ரவரி 09, திங்கட்கிழமை

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டவர் அடித்துக்கொலை

Freelancer   / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய 30 வயதான நபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிஸார் 12 பேரை கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில், திங்கட்கிழமை (28), உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஆட்டத்தின்போதுநபர் ஒருவர் 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்களில் 20க்கும் மேற்பட்டோர் கும்பலாக சேர்ந்து, அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து, 19 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில் 12 பேரை கைது செய்தனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பல் தாக்கியதில் உயிரிழந்த நபரின் பெயர்,  எந்த ஊரை சேர்ந்தவர் என்ற எந்த விவரமும் இதுவரை தெரியவில்லை. 


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X