A.K.M. Ramzy / 2020 நவம்பர் 10 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாட்னா,
பீகார் சட்டசபைக்கு 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பா.ஜனதா இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மெகா கூட்டணியும் களத்தில் இருந்தன.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது.
வாக்கு எண்ணும் பணி துவங்கியதில் இருந்தே முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருக்கி ன்றன. தேசிய ஜனநாயக கூட்டணியும் மெகா கூட்டணியும் மாறி மாறி சில சுற்றுக்களில் முன்னிலை பெற்று வருகின்றன.
இதனால், எந்தக் கட்சி வெற்றி பெறும் என்று கணிக்க முடியாத சூழல் நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 128 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஆட்சி அமைக்க 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது 128 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .