A.K.M. Ramzy / 2021 ஜனவரி 12 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணாகட்:
பாஜக அரசு விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்காததால் நாட்டில் உணவுப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதென்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நாடியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மம்தா பானர்ஜி உரையாற்றினார்.
அண்மைக் காலமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில தலைவர்கள் பாஜகவுக்கு தாவி வருவதை நீங்கள் பார்க்க முடியும். பொதுவாழ்வில் தாங்கள் கொள்ளையடித்த பணத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்கள் கட்சி தாவி வருகின்றனர்.
அரசியலில் தவறுகளைச் செய்பவர்கள் தங்கள் கட்சியில் இணைந்தால், அவர்களை புனிதமானவர்கள் என்று பாஜக அறிவித்து வருகிறது. இதுபோன்ற நபர்களை தொடர்ந்து சேர்த்துக் கொள்வதன் மூலம் பாஜக ஒரு குப்பைக் கட்சியாக மாறி விட்டது. அதில் இருக்கும் தலைவர்கள் அனைவரும் கறைபடிந்தவர்கள்.
பெருமைக்குரிய விவசாயிகள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக டில்லியை முற்றுகையிட்டு பல நாள்களாகப் போராடி வருகின்றனர். நமக்கு உணவளித்தவர்கள் குளிரிலும், மழையிலும் துன்பமடைந்து வருகின்றனர்.
ஆனால், மத்திய பாஜக அரசு அவர்களது கோரிக்கைகளை ஏற்க முடியாது என்பதில் பிடிவாதமாக உள்ளது. விவசாயிகளுக்கு உரிய நியாயம் வழங்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இது தொடர்ந்து நீடிக்கும்போது நாட்டில் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் என்றார் .
21 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
8 hours ago
9 hours ago