2026 மார்ச் 09, திங்கட்கிழமை

பாபர் மசூதி வழக்கு: நீதிபதிக்கு பாதுகாப்பை நீடிக்க மறுப்பு

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி,

 அயோத்தியிலுள்ள பாபர் மசூதி,  கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ.பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உட்பட 32 பேர் மீது குற்றம் சாட்டி நீதிமன்றில்  சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து,தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்ற நீதிபதி   எஸ்.கே.யாதவ், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டபின், சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு விலக்கப்பட்டது.அவரும் ஓய்வு பெற்றார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதி எஸ்.கே.யாதவ் கடிதம் எழுதியிருந்தார்.

 அதில், 'அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பதால், தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பை நீடிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார். ஆனால், ஓய்வு பெற்ற நீதிபதியின் கோரிக்கையை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .