Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2023 நவம்பர் 17 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாம்பு என்றாலே உள்ளூற பயம்எழுவது இயற்கைதான். உலகளவில் சுமார் 2,968 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 276 வகை பாம்புகள் உள்ளன. இந்திய அளவில் ராஜநாகம் மட்டுமே அதீத விஷத்தன்மை கொண்டது. தமிழகத்தில் சாரைப்பாம்பு, நீர்சாரை, வெள்ளிக்கோல் வரையன், பச்சைப்பாம்பு, கொம்பேறிமூக்கன், மண்ணுளி பாம்பு, பவளப்பாம்பு, அழகுபாம்பு, பிரைடல் பாம்பு, நீர்காத்தான் குட்டி, பசுஞ்சாம்பல் நிற தண்ணீர் பாம்பு உள்ளிட்ட சிலவகைகள் மட்டுமே காணப்படுகின்றன. இதில், நல்லபாம்பு, கட்டு விரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் வகை பாம்புகள் மட்டும் விஷமுள்ளவை.
காடுகள் அழிக்கப்பட்டு வருவதாலும், உணவுச்சங்கிலி உடைபட்டதாலும் பாம்பு இனங்கள் அழிவை நோக்கி வேகமாக பயணித்து வருகின்றன. உணவுதேடி வனத்தையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் புகும் பாம்புகள் பெரும்பாலும் கொல்லப்படுகின்றன. வனஉயிரின பாதுகாப்புச்சட்டம் 1972-ன்படி பாம்புகளை அடித்துக் கொன்றால் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்ற சட்டம் இருந்தும் பாம்புகள் கொல்லப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. பாம்புகளை அழிவில் இருந்து மீட்கவும், அவற்றை காப்பதன் அவசியம் தொடர்பாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு கால்நடை மருத்துவர் கே.அசோகன்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‘யானை’ டாக்டர்என அழைக்கப்படும் கிருஷ்ணமூர்த்தியின் சிஷ்யன்நான். கடந்த 1996-ம் ஆண்டுமுதல் 2000-வது ஆண்டு வரை முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் வனக்கால்நடை மருத்துவ அலுவலராகவும், 2011-ம் ஆண்டுமுதல் 2014-ம் ஆண்டு வரை கோவை வஉசி உயிரியல் பூங்காவின் இயக்குநராகவும் நான் பணியாற்றியுள்ளேன்.
என் பணிக்காலத்தில் சுட்டித்தனமான யானைகளான சின்னதம்பி, விநாயகன், உதகை சங்கர், மக்னா மூர்த்தி ஆகியவற்றை வனக்குழுவுடன் இணைந்து, நான் பாதுகாப்பாக பிடித்தேன். 300 யானைகளுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளேன். சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறி, என்னால் சிகிச்சையளிக்கப்பட்டு ‘அம்மு’ என பெயரிடப்பட்ட யானைதான், தற்போது ஆஸ்கர் விருதை வென்றார் ‘பொம்மி’.
வனத்துறையில் பணியாற்றியபோது மலைப்பாம்பு, கண்ணாடிவிரியன் என 100-க்கும் மேற்பட்ட பாம்புகளையும், ஆந்தைகள், முயல்கள், மயில்கள் போன்ற வனஉயிர்களையும் காயத்தில் இருந்தும், நோயில் இருந்தும் மீட்டுள்ளேன். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கராச்சிக்கொரை வனக்கால்நடை மருத்துவமனையில் 14 மலைப்பாம்புகளின் இயல்பை கண்டறிய அறுவை சிகிச்சையின் மூலம் டிரான்ஸ்மீட்டர் பொருத்தினேன். இது இந்தியாவிலேயே முதல்முறையாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago