2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாம்பை உயிருடன் விழுங்கிய மற்றுமொரு பாம்பு

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடலூர்:

கடலூர், கோண்டூர், ராம்நகரிலுள்ள   வீட்டொன்றின்  தோட்டத்தில் கடந்த சனிக்கைிழமை  நள்ளிரவு 12.30 மணியளவில் ஒரு பாம்பு புகுந்துள்ளது.

வீட்டிலுள்ளவர்கள் வன விலங்கு ஆர்வலருக்கு தகவல் தெரிவித்தனர். அவ்விடத்துக்கு உடனடியாக  வந்த விலங்கு ஆர்வலர் அதன்போது கண்கொள்ளாக் காட்சியைக் கண்டுள்ளார். அதாவது,நான்கு அடி நீளமுள்ள  கட்டுவிரியன் பாம்பு, இரண்டடி நீளமுள்ள  மற்றொரு நழுவை (நரிமுக பாம்பு) பாம்பை உயிருடன் விழுங்கிக் கொண்டிருந்தது.

இதனை செல்லா மற்றும் அங்கிருந்தவர்கள் அலைபேசியில் வீடியோ எடுத்தனர். அப்பகுதியில் பொது மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. பாம்பை முழுதும் விழுங்கியதும் கட்டுவிரியனை செல்லா பாதுகாப்பாக பாம்பைப் பிடித்து, அரசாங்க  காப்புக் காட்டில் விட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .