2025 ஜூலை 16, புதன்கிழமை

பாலாஜிக்கு பிணை மறுப்பு

Freelancer   / 2023 நவம்பர் 28 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்து புழல் சிறைச்சாலையில் அடைத்தது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மருத்துவ காரணங்களை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் பிணைக்கான மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்றத்திலும் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் பிணை கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் பிணை வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X