2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

பாலியல் தொந்தரவின் உச்சம்: 8 ஆம் வகுப்பு மாணவிக்கு 8 முறை கத்தி குத்து

Editorial   / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோபால்கஞ்ச்:

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச்  மாவட்டத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பிய போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதனை மாணவி தடுக்க முயற்சி செய்தபோது ஆத்திரமடைந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தி உள்ளார்.

13 நொடிகளில் 8 முறை கத்தியால் குத்தியதால் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அவர் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கத்தியால் குத்திய நபர் ஏற்கெனவே பலமுறை அந்த மாணவியை பின் தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ய முயன்றதாக குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .