2026 மார்ச் 09, திங்கட்கிழமை

பிக்பொஸ்ஸிலிருந்து வேல்முருகன் வெளியேற்றம்

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிக்பொஸ் போட்டியிலிருந்து ரேகாவுக்கு அடுத்ததாக பாடகர் வேல்முருகன் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறியுள்ளார்.

  கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பொஸ் நிகழ்ச்சி, இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியுள்ளது.  

இந்த வருட பிக் பொஸ் போட்டியில் முதலில் வெளியேறியவர் மூத்த நடிகை ரேகா. அடுத்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்ற பாடகர் ஆஜீத்,

ஏற்கெனவே  ஒரு போட்டியில் வென்று எவிக்சன் பாஸ் என்கிற பரிசை அவர் பெற்றிருந்ததால் அதைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக்கொண்டார்.

இந்நிலையில் பிக் பொஸ் நிகழ்ச்சியிலிருந்து பாடகர் வேல்முருகன் 2-வது போட்டியாளராக வெளியேறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .