A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
பிச்சை எடுப்பது குற்றச் செயலாக கருதும் சட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, ஆறு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம், 'பத்திரிகை' அனுப்ப உத்தரவிட்டது.
மஹாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், ஹரியானா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், பிச்சை எடுப்பதை குற்றச் செயலாக கருதும் சட்டம் உள்ளது.
மேலும், பிச்சை எடுப்பதை ஒழித்து, மறு வாழ்வு அளிக்கும் மசோதா, 2018இல், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படாமலேயே நிலுவையில் உள்ளது.
'பிச்சை எடுப்பதை குற்றச் செயலாக கருதும் சட்டம், ஒரு சில மாநிலங்களில் அமுலில் உள்ளது. இது, அரசியலமை ப்புக்கு எதிரானது. மேலும், குடிமக்களின் அடிப்படை வாழ்வாதார உரிமையை பறிப்பதாகும்.
நாடு முழுவதும், பிச்சை எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றால், அவர்களுக்கு தேவையான சமூக பாதுகாப்பை வழங்க, மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் தவறிவிட்டது என்றே அர்த்தம்.
அவர்களை குற்றவாளிகளாக கருத முடியாது. அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால், அவர்கள் திருடுவது அல்லது பட்டினி கிடந்து சாவதை தவிர வேறு வழியில்லை.எனவே, இது போன்ற சட்டங்கள் திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago