A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 25 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி,
புதுடெல்லியில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி இன்று வியாழக்கிழமை சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பகல் 11.20 மணியளவில் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார்.
அங்கு அவரை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பா.ஜ.க.வினர் வரவேற்கின்றனர். வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி கோரிமேடு ஜிப்மர் கலையரங்கத்துக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்துகொள்கிறார்.
அப்போது சதானந்தபுரம்-நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் காரைக்காலில் ரூ.491 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சாகர்மாலா திட்டம், இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் செயற்கை இழையினால் ஆன ஓடுதளம், ஜிப்மர் ரத்த மையம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள மகளிர் தங்கும் விடுதியையும், புதுவை நகராட்சி கட்டிடத்தையும் திறந்து வைக்கிறார்.
விழா முடிந்ததும் அங்கிருந்து லாஸ்பேட்டை ஹெலிபேடு மைதானத்துக்கு வருகிறார். அங்கு நடக்கும் பா.ஜ.க. தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டம் முடிந்ததும் பிற்பகல் 1.20 மணிக்கு மோடி புதுவையில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.பிரதமர் வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026