Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 10, சனிக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 06 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மிக்ஜம் புயல் எதிரொலியால் சென்னையில் கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.
சென்னையில் கனமழையால் மழைநீரில் மூழ்கி, மரங்கள் மற்றும் சுவர்கள் விழுந்து என வெவ்வேறு நிகழ்வுகளில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர் என சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்தது.
இந்நிலையில், மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “மிக்ஜம் சூறாவளியால் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். புயலால் பாதிப்பு அடைந்தவர்களுடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அயராது உதவிவருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள்” என பதிவிட்டுள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago