2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

’பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல’

A.K.M. Ramzy   / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுடெல்லி

பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல. இந்த தேசம் சந்தித்ததிலேயே சிறந்த ஜனநாயகத் தலைவர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவி்த்தார்.

பிரதமர் மோடி பொதுவாழ்க்கை, மக்கள் பணிக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்த 7ஆம் திகதியோடு நிறைவடைந்துவிட்டது. இதையொட்டி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு நேர்காணல் அளித்தார்.அதில் அவர் பேசியதாவது:

 

எதிர்க்கட்சியினர் கூறுவதுபோல் பிரதமர் மோடி சர்வாதிகாரி அல்ல. இந்த தேசம் சந்தித்ததிலேயே சிறந்த ஜனநாயகத் தலைவர் மோடியாகத்தான் இருப்பார். எந்தவிதமான முக்கியமான முடிவுகளையும் ஒவ்வொருவரிடமும் கலந்தாய்வு செய்தபின்புதான் எடுப்பார்.

பிரதமர் மோடி தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடியவர் என்று சிலர் அவரின் மரியாதையைக் குலைக்கும் நோக்கில் தவறான கருத்துக்களை பரப்புகிறார்கள். சில கடினமான முடிவுகளை மோடி எடுக்கக்கூடியவர், ஒழுக்கத்தை விரும்பக் கூடியவர்.

ஆனால், அரசு ரீதியான முடிவுகள், கொள்கை முடிவுகளை எடுக்கும்போது தனது விருப்பங்களை ஒருபோதும் நுழைத்தது இல்லை. நாம் வெறும் அரசாங்கத்தை  மட்டும் நிர்வகிக்க இங்கு வரவில்லை. தேசத்தை கட்டமைக்க வந்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார். பிரதமர் மோடியுடன் நான் பணியாற்றியுள்ளேன். பணியாற்றியவர்களிடம் கேளுங்கள், ஜனநாயக முறைப்படி அமைச்சரவையை இதற்கு முன் இருந்தயாராலும் நடத்தியிருக்க முடியாது. பிரதமர் மோடியைப் போல் நன்கு கவனிப்பவர் யாருமில்லை பார்த்ததும் இல்லை.

ஒவ்வொருவர் பேசுவதையும் காது கொடுத்துக் கேட்பார், தகுந்த ஆலோசனைகளைக் கூறினால் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு முக்கியத்துவம் அளிப்பார். ஆனால் இறுதி முடிவு எடுக்கக்கூடியவர் அவர்தான் ஏனென்றால் பிரதமர் அவர்தானே எனத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .