A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை;
இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் டிசம்பர் 28ஆம் திகதி காலமானார். அதற்கு ஒட்டுமொத்தத் திரையுலகினரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து ஜனவரி 6 ஆம் திகதி ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளுக்குப் பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தனது அம்மா காலமானதற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியிருப்பதாவது:
"இந்தக் கடினமான காலகட்டத்தில் உங்கள் பிரார்த்தனைகளுக்கும், இரங்கல் செய்திகளுக்கும் நன்றி. உங்கள் அன்பு மற்றும் அக்கறையை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையட்டும்".இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
21 minute ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
8 hours ago
9 hours ago