2026 மார்ச் 08, ஞாயிற்றுக்கிழமை

பிரித்தானியா விமான சேவை தடை நீடிப்பு

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதுடில்லி:

இந்தியா-பிரித்தானியாவுக்கிடையிலான விமான சேவைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை  ஜனவரி 7ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- பிரித்தானியாவுக்கிடையிலான விமான சேவைக்கு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு  இன்று இரவுடன் முடிவடையவிருந்த நிலையில், தற்போது மேலும் ஜனவரி 7ஆம் திகதி வரை தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

 அதிதீவிர கொரோனா தொற்று பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரித்தானியாவிலிருந்து இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

இது மேலும் 7 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .