2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

பிரியாணி ’ருசி’ இல்லை எனக்கூறியவர் கொலை

Freelancer   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், பஞ்சகுட்டா அடுத்த சந்திராயன் குட்டாவை சேர்ந்த 30 வயதானவர். அதே பகுதியிலுள்ள ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் பிரியாணி  சாப்பிட சென்றுள்ளார்.

பிரியாணியானியை சாப்பிட்டுக்கொண்டிருந்த அவருடைய நண்பர்கள் பிரியாணி  ருசியாக இல்லை என ஹோட்டல் ஊழியரிடன் தெரிவித்தனர்.

  இதனையடுத்து ஹோட்டல் ஊழியர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்  அவர்களை தூக்கி வெளியே வீசியுள்ளனர்.

இதில், 30 வயதானவர் படு​காயமடைந்தார். சக நண்பர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும், ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

விடயத்தை அறிந்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X