Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 26 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
' பிரைட்’ சிக்கன் விவகாரம் முற்றிப்போய், தன்னுடைய மனைவியையே கணவன், படுகொலைச் செய்துள்ள சம்பவமொன்று, உத்தரப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரேம் நகர் காலனி பகுதியில் வசித்து வரும் தையல் காரரான ஷாஹித் ஹுசைன். தன்னுடைய மனைவியான பானோவிடம், சந்தையில் இருந்து பிரைட் சிக்கன் வாங்குவதற்காக பணம் கேட்டுள்ளார். பணம் தர பானோ மறுத்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்குப் பிறகு வெளியே சென்ற பானோ, சிக்கன் வாங்கி வந்துள்ளார். இருப்பினும், இருவருக்கும் இடையே தகராறு தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஹுசைன், கத்தரிக்கோலால் பானோவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பானோ, அங்கு உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், ஹுசைனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago