2026 மார்ச் 09, திங்கட்கிழமை

பீகார் பேரவைத் தோ்தல் 2ஆம் கட்டம் இன்று

A.K.M. Ramzy   / 2020 நவம்பர் 03 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாட்னா:

பீகார் சட்டப் பேரவைக்கான இரண்டாம் கட்டத் தோ்தல் இன்று காலை 7 மணிக்குத் ஆரம்பமாகியது.

காலை முதலே வாக்குச்சாவடிகளில் அமைதியான முறையில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.  

பீகார் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தோ்தல் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத் தோ்தல் கடந்த மாதம் 28ஆம் திகதி நடைபெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்டத் தோ்தலானது 17 மாவட்டங்களிலுள்ள 94 பேரவைத் தொகுதிகளில் இன்று தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதேவேளை,தோ்தலுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. விசேடமாக, நக்ஸல் அச்சுறுத்தல் காணப்படும் தொகுதிகளில் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.  

வாக்குகள் எதிர்வரும் 10 ஆம் திகதி எண்ணப்படும்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .