2026 மார்ச் 07, சனிக்கிழமை

புதுச்சேரி ஆளுனராக தமிழிசை பொறுப்பேற்பு

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 18 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி:

புதுச்சேரி ஆளுனர் பதவியில் இருந்து கிரண்பேடி, நேற்று முன்தினம் இரவு நீக்கப்பட்டார். தெலுங்கானா ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜனிடம், புதுச்சேரி ஆளுனர் பொறுப்பு, கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தமிழிசை சவுந்திரராஜன் நேற்று மாலை புதுச்சேரிக்கு வந்தார்.

விமான நிலையத்தில் நிருபர்களிடம், ஆளுனர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வீரர்களை உருவாக்கிய ஆன்மிக பூமி இது. பாரதியார், பாரதிதாசன் நேசித்த மண் இது. இத்தகைய மண்ணுக்கு, தமிழ் பேசும் மாநிலத்துக்கு ஆளுனராக வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, என் பணி தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'புதுச்சேரி காங்., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு உத்தரவிடுவீர்களா' என, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ''நான் தற்போது தான் வந்துள்ளேன்; இது பற்றி முழுமையாக தெரியாது. தற்போது ஆளுனராக மட்டுமே புதுச்சேரிக்கு வந்துள்ளேன்,'' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .