2026 மார்ச் 07, சனிக்கிழமை

புதுச்சேரி சபாநாயகர் இராஜினாமா

A.K.M. Ramzy   / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதுச்சேரி

புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை இராஜினாமா செய்து ஆளுநர் தமிழிசைக்கும், சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால், அவர் தனது எம்எல்ஏ பதவியை இராஜினாமா செய்யவில்லை.

புதுவை காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்எல்ஏல்கள் லட்சுமி நாராயணன், தீப்பாய்ந்தான், ஜான்குமார், திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் ராஜினாமா செய்தனர். இவர்களில் மல்லாடி கிருஷ்ணாராவ், லட்சுமி நாராயணனைத் தவிர்த்து மற்றவர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில் காரைக்காலில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் முன்னாள் எம்எல்ஏக்கள் ஜான்குமார், வெங்கடேசன், அருள்முருகன் உள்ளிட்டோர் நேற்று இணைந்தனர். இவர்களுடன் சபாநாயகரின் சொந்தத் தம்பியான வி.பி.ராமலிங்கம் அவரது மகன் வி.சி.ரமேஷ் ஆகியோரும் பாஜகவில் இணைந்தனர்.

இதனால் சபாநாயகரும் பாஜகவில் இணைவார் என்ற தகவல் பரவியது. இந்நிலையில் சபாநாயகர் சிவக்கொழுந்து தனது பதவியை இராஜினாமா செய்து ஆளுநர் தமிழிசைக்கும், சட்டப்பேரவைச் செயலர் முனுசாமிக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .