A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்ததை அடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அடுத்தடுத்து பதவி விலகியதால், எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தின. இதையடுத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி நாராயணசாமி அரசுக்கு பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டார்.
இதன் தொடர்ச்சியாக கடந்த திங்கள்கிழமை பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் நாராயணசாமி உரையாற் றினார். அப் போது, அவர் மத்திய அரசு மற்றும் முன்னாள் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கடுமையாக சாடினார். பின்னர் காங்கிரஸ் மற்றும் திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்தார்.
இதனால், சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானம் நிறைவேற வில்லை என பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார். இதனால் அரசு கவிழ்ந்தது. பின்னர் தனது அமைச்சரவையின் இராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் நாராயணசாமி அளித்தார்.
தேர்தல் நெருங்கும் இறுதிக்கட்டத்தில், நடந்திருக்கும் இப்பிரச்சினை புதுவை அரசியலில் ஒரு குழப்பமான சூழலை உருவாக்கியிருக்கிறது.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கடைசி 2 மாதங்களுக்காக ஆட்சியமைக்க உரிமை கோருவதால் எந்த ஆதாயமும் இல்லை. அதன்மூலம், காங்கிரஸ் தரப்பே அனுதாபத்தை சம்பாதிக்கும். எனவே, தேர்தலை முறையாக சந்திப்பதில் கவனம் செலுத்துவது பற்றி ஆலோசித்து வருகிறோம்’’ என்றனர்.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026