A.K.M. Ramzy / 2021 பெப்ரவரி 17 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுச்சேரி:
புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண்பேடிக்கும், அந்த மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
கடந்த வாரம்கூட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார்.
இதையடுத்து நேற்று திடீரென புதுச்சேரி ஆளுநர் கிரண்பெடி திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி ஆளுநர் பொறுப்பை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
புதுச்சேரியில் அரசியலமைப்புக்குட்பட்டு துணைநிலை ஆளுநராக எனது கடமையை செய்தேன். தார்மீக பொறுப்புகளை உணர்ந்து அரசியலமைப்பு பணிகளை அப்பழுக்கற்ற வகையில் செய்துள்ளேன்.
தனக்கு துணைநிலை ஆளுநர் பதவி அளித்து பணியாற்ற வாய்ப்பு அளித்த மத்திய அரசுக்கு நன்றி.புதுச்சேரிக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. அது மக்களின் கையில் உள்ளது என்றார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago