A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 31 , பி.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சபரிமலை :
மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்தார்.
மண்டலபூஜை முடிந்து டிசம்பர் 26 ஆம் திகதி இரவு 9:00 மணிக்கு அடைக்கப்பட்ட சபரிமலை நடை நேற்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி ஜெயராஜ்போற்றிக்கு உதவியாக இருந்த மூன்று பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் தனிமைப் படுத்தலில் உள்ளார்.இதனால் தந்திரி கண்டரரு ராஜீவரரு நடை திறந்து பக்தர்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கினார்.
வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிஷேகம் மற்றும் வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஜனவரி 14ஆம் திகதி மகரவிளக்கு பெருவிழா நடைபெறுகிறது.
மண்டல சீசனில் இரண்டாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் ஜன.,19 வரை தினமும் ஐந்தாயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
07 Mar 2026
07 Mar 2026