2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

பூதாகரமாக வெடித்த ’பர்தா’ விவகாரம்; காவித் துண்டுகளை அணிந்து வரும் மாணவர்கள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 07 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் முதலமைச்சர்  பசவராஜ் தலைமையில் பா.ஜ.க வின்  ஆட்சி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் அங்குள்ள உடுப்பி அரசு மகளிர் பல்கலைக்கழகத்தில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவிகள்  பர்தா அணிந்து வகுப்பிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தின் சீருடை விதிகளின்படி, வளாகம் வரை முஸ்லிம் மாணவிகள்  பர்தா அணிந்து வர அனுமதி உள்ளது.

எனினும் குறித்த  ஆறு மாணவிகள்  வகுப்பறைக்குள் பர்தா அணிந்து வந்ததால், விதிமுறையை சுட்டிக் காட்டி அவர்களை அப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது.

இச்சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே கல்லூரி நிர்வாகத்தைக் எதிர்த்து மாணவியர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ் வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் உடுப்பியை தொடர்ந்து மேலும் பல நகரங்களில் முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வர ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹிந்து மாணவ - மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்பறைக்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே முஸ்லிம் மாணவியர் பர்தா அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, கர்நாடகாவில் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான முஸ்லிம் மாணவியர் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில்  குறித்த விவகாரம் காங்., - பா.ஜ., தலைவர்கள் இடையே மோதலுக்கு வழி வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X