Editorial / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

தாங்கள் இருவரும் தனியாக சந்திக்க விரும்பினோம். அதன்போது, தனது காதலனே மேற்படி முறையொன்றை கூறினார் என காதலி தெரிவித்துள்ளார்.
மங்களூரில் உடுப்பி மாவட்டம் மணிப்பால் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரி விடுதியில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவர் ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றார். பின்னர் நீண்ட நேரம் கழித்து அந்த மாணவர் டிராலி பெட்டியுடன் விடுதிக்குள் நுழைந்தார். இதை பார்த்த கல்லூரி விடுதி காவலாளிக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர், மாணவரிடம் டிராலி பெட்டியை சோதனை நடத்த தரும்படி கேட்டுள்ளார்.
ஆனால் அதற்கு மாணவர் மறுத்து விடுதிக்குள் செல்ல முயன்றார். ஆனாலும் காவலாளி விடாப்பிடியாக மாணவரை தடுத்து நிறுத்தி பெட்டியை வாங்கி திறந்து பார்த்தார். அப்போது அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது டிராலி பெட்டியில் இருந்து இளம்பெண் ஒருவர் வெளியே வந்தார். இதை பார்த்து விடுதி காவலாளி, விஷயம் தெரிந்து வந்து பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மாணவனிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், தனது காதலி என்று கூறினார்.
ஆனாலும் பெட்டிக்குள் பெண்ணை மறைத்து வைத்து எடுத்து வந்ததால் கொலை முயற்சியாக இருக்கும் என்று கருதிய விடுதி காவலாளி, மணிப்பால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் பேரில் பொலிஸார் விடுதிக்கு விரைந்து வந்தனர்.
கல்லூரி விடுதிக்கு அழைத்து சென்று...
இதையடுத்து மாணவன், இளம்பெண்ணிடம் பொலிஸார், தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மாணவர், ‘அந்த பெண் தனது காதலி. நாங்கள் இருவரும் காதலித்து வருகிறோம். காதலியை கல்லூரி விடுதிக்குள் அழைத்து செல்ல ஆசைப்பட்டேன். ஆனால் விடுதிக்குள் பெண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் பெட்டிக்குள் மறைத்து காதலியை அழைத்து செல்ல முயற்சித்தேன். ஆனால் அதற்குள் சிக்கி கொண்டேன். இதில் வேறு எந்த நோக்கமும் இல்லை' என்றார்.
இதுபற்றி இளம் பெண்ணிடம் விசாரிக்கும்போது. ‘இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்தோம். அதற்கு விடுதிதான் சரியான இடம் என்று காதலன் கூறினார். எப்படி செல்வது என்று திட்டமிட்டபோது, இந்த யோசனை தென்பட்டது' என்றார். இந்த சம்பவம் விடுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கெமராவில் பதிவாகியிருந்தது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago