2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

பெண் பொலிஸார் மீது கத்திக்குத்து

A.K.M. Ramzy   / 2021 நவம்பர் 17 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடைக்கானல்

கொடைக்கானலில் விசாரணைக்காக சென்ற பொலிஸார் இருவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிய இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் நேற்று இரவு (நவம்பர் 16) பெண் காவலர்கள் இருவர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தவழியாக இருசக்கரவாகனத்தில் வந்த கொடைக்கானல் அன்னைதெரசா நகரை சேர்ந்தவரின் வாகனத்தை பெண்பொலிஸார் நிறுத்தியுள்ளனர். அப்போது பெண் பொலிஸாரைத் தகாதவார்த்தையால் பேசி, மிரட்டல் விடுத்துவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதுகுறித்து பெண் பொலிஸார் கொடைக்கானல் பொலிஸ் நிலையத்தில் பணியில் இருந்த பொலிஸாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொலிஸார் அன்னைதெரசா நகர் சென்று வீட்டில் இருந்தவடம் விசாரணை நடத்தினர்.

அப்போது உரிய பதில் அளிக்காமல், தான் வைத்திருந்த கத்தியால் இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் குற்றவாளி குத்தியுள்ளான்.

இதில் படுகாயமடைந்த இவர்கள், இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய குற்றவாளியை, கொடைக்கானல் மலையடிவாரத்திலுள்ள பொலிஸ்  சோதனை சாவடியில் பிடிபட்டார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .